செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2024 (09:55 IST)

கலக்கும் Kawasaki Ninja 500 புதிய மாடல்.. முந்தைய மாடலுக்கு அதிரடி டிஸ்கவுண்ட்! – பைக் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

Kawasaki
பிரபலமான கவாஸகி நிறுவனத்தின் புதிய நின்ஜா 500 மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ள நிலையில் முந்தைய மாடலான நின்ஜா 400 மீது சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.



இந்தியாவில் இளைஞர்களிடையே லாங் ட்ரைவ், ரேஸ் கலாச்சாரம் அதிகரித்துள்ள நிலையில் அதற்கு தகுந்த வகையிலான பைக்குகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. கவாஸகி நிறுவனம் அவ்வாறான அல்ட்ரா மாடல் பைக்குகளை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அறிமுகமான Kawasaki Ninja 500 மாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

லிக்விட் கூல் 8 வால்வு கொண்ட 4 ஸ்ட்ரோக் பேரலல் ட்வின் எஞ்சினை இந்த மாடல் கொண்டுள்ளது. அதிகபட்ச ஆற்றலாக 45.41 PS @ 9000 rpm வெளிப்படுகிறது. 451 சிசி எஞ்சின் அதிகபட்ச வேகத்தை வழங்குகிறது. 14 லிட்டர் வரை பெட்ரோல் கொள்ளளவு கொண்ட இந்த Kawasaki Ninja 500 இந்திய சந்தையில் ரூ.5.24 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது.

இந்த புதிய Kawasaki Ninja 500 அறிமுகத்தை தொடர்ந்து முந்தைய மாடலான Kawasaki Ninja 400 மீதான விலையில் அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி Kawasaki Ninja 400 மாடலுக்கு ரூ.40,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை மார்ச் 31 வரை செல்லுபடியாகும் என கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K