1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 7 ஜூலை 2020 (07:45 IST)

லாக்டவுனில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய யுடியூபர்! எப்படி தெரியுமா?

கொரோனா லாக்டவுன் காலத்திலும் அதிகளவில் சம்பாதித்து விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த கவுரவ் சவுத்ரி என்ற இளைஞர்.

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான தொழில்களும் முடங்கி மக்கள் வருவாய் இழப்பை சந்தித்து வரும் வேளையிலும் பல இளைஞர்கள் வருவாயை பெருக்கி சாதித்து வருகின்றனர். அந்த வகையில் துபாயில் வசித்து வரும் இந்தியரான கவுரவ் சவுத்ரி லாக்டவுனிலி ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

யுடியூப் சேனல் ஒன்றை நடத்திவரும் கவுரவ் எந்தவிதமான எலக்ட்ரானிக் பொருட்கள் வந்தாலும் அதை உடனே வாங்கி அதன் நிறைகுறைகளை அலசி வீடியோ ஒன்றை வெளியிடுவார். இதன் மூலம் அவரது சேனலுக்கு 35 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். அவர் வெளியிடும் பல வீடியோக்களும் லட்சக்கணக்கானவர்களால் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அவருக்கு மாதம் 20 லட்சத்துக்கு மேல் வருவாய் வரும் என சொல்லப்படுகிறது.