1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Jio service would be extended for 18 more months

18 மாதங்கள் வரை நீடிக்கவிருக்கும் ஜியோ சேவை??

18 மாதங்கள் வரை
ஜியோ 4ஜி சேவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டு மார்ச் 31 ஆம் தேதி வரை முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது.


 
 
இந்நிலையில் ஜியோ கட்டண சேவைகள் பிரைம் திட்டத்தின் மூலம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. 
 
எனினும், ஜியோ பிரைம் திட்டத்தில் சேர கடைசி நாள் ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 
இத்துடன் ஜியோ சேவைகள் மேலும் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி ரிலையன்ஸ் ஜியோ மலிவு விலை சேவைகள் மேலும் 12 முதல் 18 மாதங்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது. 
 
ஜியோ வாடிக்கையாளர்களை அதிகரிக்க அந்நிறுவனம் மலிவு விலையில் சலுகைகளை வழங்கும் என்றும் அடுத்த 12 - 18 மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் இது தொடரும் என்றும் டெலிகாம் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஜே.கே. ரித்தீஷ் மீது வழக்குப் பதிவு ; ரூ. 2.18 கோடி மோசடி புகார்