ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (12:26 IST)

வெளியாகிறது JIO Brain, JIO OS மற்றும் பல..! வேற லெவல் அப்டேட்ஸ் கொடுத்த ஜியோ!

Jio Brain

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஜியோ தற்போது தனது புதிய JIO AI தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறது.

 

 

இந்தியாவில் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு சேவைகளில் ஜியோ முன்னணியில் உள்ளது. தொலைத்தொடர்பு மட்டுமல்லாமல் ஓடிடி தளம், லைவ் டிவி, ஃபைபர், ஏர் ஃபைபர், பேமண்ட் பேங்க் என ஜியோ பல்வேறு தொழில்நுட்ப துறைகளிலும் விரிந்து வளர்ந்துள்ளது.

 

சமீபமாக உலக அளவில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் ஜியோ நிறுவனமும் தனது புதிய ஜியோ ஏஐ தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்கிறது. நேற்று நடந்த ரிலையன்ஸ் வருடாந்திர கூட்டத்தில் இதுகுறித்த அறிவிப்புகளை முகேஷ் அம்பானி வெளியிட்டார்.

 

இந்தியா முழுவதும் ஜியோவை 490 மில்லியன் பயனாளர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் உலகின் மிக நீண்ட மொபைல் டேட்டா நிறுவனமாக ரிலையன்ஸ் வளர்ந்துள்ளது. தற்போது 130 மில்லியன் ஜியோ பயனாளர்கள் ஜியோ ட்ரூ 5ஜி சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

 

ஜியோ தற்போது தனது செயற்கை நுண்ணறிவான JIO Brainஐ உருவாக்கியுள்ளது. இது ஏஐ தொழில்நுட்பத்தின் அனைத்து சாத்தியக் கூறுகளையும் பயனருக்கு வழங்கும். மேலும் வரும் தீபாவளியில் ஜியோ ஏஐ உடன் கூடிய 100 ஜிபி இலவச க்ளவுட் ஸ்டோரேஜ் சலுகை ஜியோ பயனாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. 

 

மேலும் ஸ்மார்ட் டிவிகளுக்கான ஜியோ ஓஎஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. இது 4K UHD, Dolby Atmos, Dolby Vision சப்போர்ட் செய்யும் வசதிகளை வழங்கும் என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K