வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 19 அக்டோபர் 2019 (13:59 IST)

புற்றுநோய் வரவழைக்கும் பேபி பவுடர்?: திரும்ப பெற்ற ஜான்சன் அண்ட் ஜான்சன்

பிரபலமான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகள் பவுடரில் புற்றுநோய் உருவாக்கும் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் உலகம் முழுவதும் குழந்தைகளை பராமரிப்பதற்கான பொருட்களை விற்பனை செய்து வருகின்றது. இந்நிலையில் இந்த நிறுவன பொருட்களை பயன்படுத்தியதால் பல்வேறு நோய்கள் ஏற்பட்டுள்ளதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன பொருட்களை அமெரிக்க அரசு ஆய்வுக்கு உட்படுத்தி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி ப்வுடரை பரிசோதித்தப்போது புற்றுநோயை ஏற்படுத்தும் ஆஸ்பெஸ்ட்ராஸ் என்ற நச்சு அதில் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அதற்கு முந்தைய தயாரிப்பு பவுடர்களில் அந்த நச்சு இல்லை என்பது கண்டறியப்பட்டது. குறிப்பிட்ட அந்த தொகுப்பில் உள்ள பவுடர்களில் மட்டும் ஆஸ்பெஸ்ட்ராஸ் இருப்பது கண்டறியப்பட்டதால் சுமார் 33 ஆயிரம் பேபி பவுடர் டப்பாக்களை திரும்ப பெற்றுள்ளது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்.

ஏற்கனவே பிலடெல்பியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் மீது தொடரப்பட்ட வழக்கில் 19000 கோடி நஷ்ட ஈடாக கொடுக்கும்படி அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.