1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Google Brings Gemini to Chrome on Android in India with New Auto Browse Feature

ஆண்ட்ராய்டு குரோம் பயனர்களுக்கு கூகுள் ஜெமினியின் புதிய வசதி அறிமுகம்! சூப்பர் தகவல்..

Google
இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்காகக் கூகுள் குரோம் உலாவிக்குள்  நேரடியாகச் செயல்படும் 'ஜெமினி ஏஐ' வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் பிற செயலிகளுக்கு மாறாமல், ஒரே பக்கத்தில் இருந்தபடியே கட்டுரைகளின் சுருக்கம், கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தகவல்களை எளிதாகப் பெற முடியும்.
 
இதில் அறிமுகமாகியுள்ள 'ஆட்டோ பிரவுஸ்' என்ற சிறப்பம்சம் மூலம், இணையத்தில் படிவங்களை நிரப்புவது, பார்க்கிங் முன்பதிவு செய்வது மற்றும் மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்வது போன்ற பணிகளை ஏஐ உதவியுடன் எளிதாகச் செய்ய முடியும். மேலும், கூகுள் கேலண்டர் மற்றும் கீப்  ஆகிய செயலிகளுடன் இணைத்துத் தகவல்களைச் சேமிக்கும் வசதியும், புகைப்படங்களை உருவாக்க உதவும் 'நானோ பனானா'   அம்சமும் இதில் வழங்கப்பட்டுள்ளன.
 
பாதுகாப்பைப் பொறுத்தவரை, உணர்திறன் மிக்க பணிகளைச் செய்வதற்கு முன் பயனர்களின் அனுமதியைப் பெறுமாறு பாதுகாப்பு வழிமுறைகள் இதில் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது ஆண்ட்ராய்டு குரோமில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஆங்கில மொழிகளில் மட்டுமே இச்சேவை தொடங்கப்பட்டிருந்தாலும், விரைவில் பிற மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு 'Z+' பாதுகாப்பு.. மத்திய அரசு அதிரடி..