1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 21 ஜனவரி 2018 (19:54 IST)

உங்கள் முகத்தின் சாயல் கொண்ட ஓவியத்தை பார்க்க வேண்டுமா?

கூகுள் நிறுவனத்தின் Google Art and Culture என்ற செயலி உங்கள் முகத்தை ஓவியத்துடன் ஒப்பிட்டு அதேபோல் உள்ள ஓவியத்தை கண்டுபிடித்து கொடுக்கிறது.

 
கூகுள் நிறுவனத்தின் அதிகம் கவனிக்கப்படாத செயலிகளில் ஒன்று இந்த Google Art and Culture. இதில் இந்தியாவின் பண்பாட்டு வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கதை ஏற்படுத்திய இந்தியப் பெண்களைப் பற்றிய குறிப்புகளும் படங்களும் கடந்த ஆண்டு இடம்பெற்றன.
 
ஒரு செல்ஃபி எடுத்தால் போதும் அந்த புகைப்படத்தில் உள்ள முகத்தைப் போல இருக்கும் ஓவியம் ஒன்றை தேடி காண்பிக்கும் வசதி இந்த செயலியில் அறிமுகமாகியுள்ளது. அப்படியே முகத்தின் சாயலில் இருக்கும் அந்த ஓவியம்.
 
இந்த வசதி இந்தியா உள்ளிட்ட 70 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்த வசதி அறிமுகமான சிறிது நேரத்திலேயே 3 கோடி செல்ஃபிக்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் எடுக்கப்பட்டுள்ளன என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.