கள்ள சந்தையில் அமோக விற்பனையாகும் ஜியோ சிம்!!

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 18 அக்டோபர் 2016 (10:47 IST)
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ 4ஜி சிம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளதால், அளவில்லா ஹெச்.டி வாய்ஸ் காலிங், வீடியோ காலிங், அளவில்லா குறுஞ்செய்தி மற்றும் அதிவேக இண்டர்நெட் என பல்வேறு அறிவிப்பை அறிவித்தது.

 
இதன் காரணத்தால் ஜியோ சிம் வாங்கும் ஆர்வம் மக்களிடம் அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் ஷோ ரூம்களில் இலவசமாக கிடைக்கும் இந்த சிம் அதிகளவு தேவை உள்ளதால் வெகுவிரைவில் விற்பனை ஆகிவிடுகிறது. 
 
ஜியோ சிம்மை அதிக நபர்கள் வாங்கி அதை உபயோகித்தால், நிறுவனத்தை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லலாம் என்ற நோக்கில் ரிலையன்ஸ் ஷோ ரூம் அதிகாரிகளே சில்லரை விற்பனையாளர்களுக்கு சிம்மை விற்பனை செய்ய கொடுத்து வருகின்றனர்.
 
இவ்வாறு கொடுக்கப்படும் சிம் கார்டுகள் கள்ளச்சந்தையில் ரூ.50 முதல் ரூ.500 வரை விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :