வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 27 டிசம்பர் 2018 (08:37 IST)

லிப்ட் டெக்னாலஜியில் புதிய பாம்பன் பாலம்: வீடியோ வெளியிட்டு அசத்திய அமைச்சர்

இராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் இந்தியாவின் அடையாளங்களில் ஒன்று. கப்பல் வரும்போது பாலம் தூக்கப்படும் காட்சியை காணவே அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருவார்கள். கடந்த 1911ஆம் ஆண்டு தொடங்கி 1915ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பாடல் நூறு ஆண்டை கடந்துவிட்டது.

இந்த நிலையில் இந்த பாலத்தில் தற்போது பழுது ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  நூற்றாண்டை கடந்து விட்ட இந்த பாலத்திற்கு பதிலாக, 250 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.

இங்கு அமையவிருக்கும் புதிய பாலம் லிப்ட் டெக்னாலஜியில் கட்டப்படவுள்ளது. கப்பல் வரும்போது பாலத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் லிப்ட் போல் தூக்கப்படும். கப்பல் சென்ற பின்னர் மீண்டும் கீழிறக்கப்பட்டு ரயில் பாதையாக பயன்படுத்தப்படும்.

இந்த புதிய பாலத்தின் மாதிரி வீடியோவை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தா வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.