வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 ஜனவரி 2024 (10:42 IST)

டூவல் AI கேமரா.. 200% சூப்பர் சவுண்ட் சிஸ்டம்! வெளியானது Infinix Smart 8! – முழு விவரங்கள்!

Infinix Smart 8
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தனது புதிய Infinix Smart 8 ஸ்மார்ட்போனை இன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.



இந்தியாவில் குறைவான விலையில் பல சிறப்பம்சங்களோடு கூடிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் நிறுவனங்களில் இன்ஃபினிக்ஸ் நிறுவனமும் ஒன்று. தற்போது இன்ஃபினிக்ஸ் நிறுவனம் பட்ஜெட் விலையில் சிறப்பான அம்சங்களுடன் புதிய Infinix Smart 8 ஸ்மார்போனை வெளியிட்டுள்ளது.

Infinix Smart 8 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
 
  • 6.6 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே
  • யுனிசாக் டி606 சிப்செட், ஆக்டாகோர் ப்ராசஸர்
  • மாலி G57 GPU
  • 3 ஜிபி / 4 ஜிபி ரேம் + 6 ஜிபி / 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்
  • 64 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 2 டிபி வரை நீட்டிக்கக்கூடிய மெமரி ஸ்லாட்
  • 13 எம்பி + AI Lens ப்ரைமரி டூவல் கேமரா
  • 8 எம்.பி முன்பக்க கேமரா
  • 200% அதிகப்படுத்தப்பட்ட சவுண்ட் சிஸ்டம்
  • 5000 mAh பேட்டரி, 10 W ஃபாஸ்ட் சார்ஜர்
 
இந்த Infinix Smart 8 ஸ்மார்ட்போனில் 4ஜி வரை மட்டுமே சப்போர்ட் செய்யும். இந்த Infinix Smart 8 ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஒயிட், ரெயின்போ ப்ளூ, ஷைனி கோல்ட் ஆகிய மூன்று வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

இந்த Infinix Smart 8 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடல் ரூ.6,399 என்றும், 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மாடல் ரூ.7,499 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த Infinix Smart 8 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.

Edit by Prasanth.K