செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 27 மார்ச் 2020 (22:01 IST)

கொரோனா எதிரொலி : மக்களை கவர்ந்த சமூக வலைதளங்கள் !!

கொரோனா எதிரொலி : மக்களை கவர்ந்த சமூக வலைதளங்கள் !!

கொரொனா பாதிப்பால், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதிவரை 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. சீனாவை அடுத்து அதிக மக்கள் தொகை (138 கோடி ) பரப்பளவு கொண்ட இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து வயதினரும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டுக்குள் உள்ளனர். இதனால் தொலைக் காட்சி, ரேடியோ, புத்தகம் என அடுத்தபடியாக சமூக வலைதளங்கள் தான் மக்களின் முக்கியப் பொழுதுபோக்க உள்ளது.

இந்நிலையில், கடந்த மார்ச் 14 முதல் 24 ஆம் தேதிக்குள் மட்டும்  25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்கள் 30 சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

முதலில் 27% ஆக இருந்த  வாட்ஸ் ஆப் பயன்பாடு தற்போது, 41 % எட்டியுள்ளது.அதேபோல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றிலும் 40 % வளர்ச்சி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.