சூப்பரோ சூப்பர்... பப்ஜியை ஓரம் கட்ட வந்த அபெக்ஸ் லெஜண்ட்ஸ்!

Last Updated: திங்கள், 11 பிப்ரவரி 2019 (19:46 IST)
பப்ஜி மற்றும் ஃபோர்ட்நைட் கேம்கள் தற்போது இளசுகளின் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இவ்விரு கேம்களுக்கு போட்டியாக தற்போது அபெக்ஸ் லெஜண்ட்ஸ் என்னும் கேம் வெளியாகியுள்ளது.
 
கேமிங் சந்தையில் சர்வதேச அளவில் பிரபல நிறுவனங்களான இ.ஏ. மற்றும் ரிஸ்பான் எண்டர்டெயின்மென்ட் இணைந்து இந்த அபெக்ஸ் லெஜண்ட்ஸ் எனும் புதிய ராயல் கேமினை அறிமுகம் செய்துள்ளது. 
 
அபெக்ஸ் லெஜண்ட்ஸ் வெளியான முதல் 72 மணி நேரத்தில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த கேமினை விளையாட துவங்கியுள்ளனர். தற்போது அபெக்ஸ் லெஜண்ட்ஸ் சோனியின் பிளே ஸ்டேஷன் 4 (PS4) கன்சோல்கள், மைக்ரோசாஃப்ட் எக்ஸ்பாக்ஸ் ஒன் மற்றும் கணினிகளில் கிடைக்கிறது. 
ஆனால், இந்த கேம் பப்ஜி மற்றும் ஃபோர்ட்நைட் கேம்களுக்கு போட்டியாக பார்க்கபப்டுவதால், விரைவில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களிலும் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
பப்ஜி மற்றும் ஃபோர்ட்நைட் கேம்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களிலும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :