ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 26 ஜூலை 2022 (22:28 IST)

5 ஜி அலைக்கற்றை ஏலம்: ஜியோ , ஏர்டெல் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் இடையே கடும் போட்டி !

5g network
வீடியோ ஸ்டீரீமிங்  மற்றூம் வீடியோ டவுண்லோட் எளியையாக்கும் வகையில் 5ஜி அலைக்கற்றை  அடுத்தகட்ட தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் என்ற நிலையில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் இன்று தொடங்கியது.

இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஏலத்தில் அதானியின் டேட்டா நெட்வொர்க்ஸ், ரிலையன்ஸ், ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றது.

இந்த ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ், அதானி டேட்டா ஆகிய நான்கு நிறுவனங்களு இடைய கடும் போட்டி நிலவியது. இதில், 4 நிறுவனங்களும் ரூ.21 ஆயிரத்து 800 கோடி வரை முன்பணம் செலுத்தியுள்ளன.

இத்ல் ரிலையன்ஸ் ரூ.16,000 கோடியும், ஏர்டெல் ரூ.5,500 கோடியும், வோடபோன் ரூ.2,200 கோடியும், அதானி டேட்டா நிறுவனம் ரூ.100 கோடியும் முன்பணம் செலுத்தியுள்ளது.

அதன்படி, இந்த ஏலத்தில் 4 சுற்றுகள் முடிவடைந்த  நிலையில், ஐந்தாவது சுற்று நாளை நடக்கும் என அறிவித்துள்ளனர்.

இந்த 5 ஜி சேவை இன்னும் சில ஓரிரு மாதங்களில் தொடங்கும் எனவும் முதலில் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் அடுத்தகட்டமாக பிற நகரங்களில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.