செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By siva
Last Updated : புதன், 13 அக்டோபர் 2021 (07:22 IST)

இன்று இரண்டாவது பிளே ஆஃப் போட்டி: கொல்கத்தா-டெல்லி பலப்பரிட்சை

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்று பிளே ஆப் இரண்டாவது சுற்று போட்டி நடைபெற உள்ளது
 
இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி டெல்லி அணியுடன் மோத உள்ளது என்பதும் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிகள் சென்னை அணியுடன் மோதும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
கொல்கத்தா அணியை பொறுத்தவரை அந்த அணியில் நீண்ட பேட்டிங் வரிசை உள்ளது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. தினேஷ் கார்த்திக், சுனில் நரேன், கில், ராகுல் திரிபாதி ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் டெல்லி அணியை பொறுத்தவரை கேப்டன் ரிஷப் பந்த், தவான், ஹெட்மையர், ராகுல் திரிபாதி ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு சார்ஜாவில் நடைபெற உள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெல்லும் அணி யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்