வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By Sinoj
Last Modified: வியாழன், 6 மே 2021 (23:35 IST)

மாலத்தீவு சென்ற ஐபிஎல் வீரர்கள்...ஏன் தெரியுமா?

ஐபிஎல்-2021 தொடர் இந்த ஆண்டு சிறப்பாகத் தொடங்கியது. ஆனால், இந்தியாவில் பரவிவரும் கொரொனா இரண்டாம் அலைப்பரவலால் ஐபிஎல் வீரர்களுக்கும் கொரொனா தொற்று உண்டானது. எனவே ஐபிஎல் தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது
.
இது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தாலும், இதுஒருவிதத்தில் நல்லது என கருத்துகள் கூறிவருகின்றனர் விமர்சகர்கள்.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால், ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியாவிலிருந்து புறப்பட்டு மாலத்தீவு செல்கின்றனர். ஆஸ்திரேலியா வீரர் மைக் ஹசியை தவிர மற்றவர்கள் அங்கு செல்லவுள்ளனர். அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பயணி அனுமதி கிடைக்கும் வரை அனைவரும் அங்கு தங்கியிருப்பார்கள் எனத் தகவல் வெளியாகிறது.