கொரோனாவுக்காக கோடிகளை கரைக்கும் பிசிசிஐ!!
பிசிசிஐ நிர்வாகம் கொரோனா பரிசோதனைகளுக்கு மட்டும் கோடி கணக்கில் பணம் செலவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உள்பட 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஐக்கிய அரபு நாட்டில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவி பணியாளர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் தற்போது நலமுடன் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா அதிகரித்து வரும் நிலையில் ஆகஸ்டு 20 ஆம் தேதியில் இருந்து ஐபிஎல் போட்டி முடியும் வரை சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சுகாதார மையத்தை பிசிசிஐ நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த கொரோனா பரிசோதனைகளுக்கு மட்டும் 10 கோடி ரூபாயை செலவு செய்ய இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.