கேப்டனான நான் ஓடி ஒளிய மாட்டேன்; இது எங்களுக்கு பாடம்! – தோல்விக்கு பின் தோனி பேட்டி!

Dhoni CSK
Prasanth Karthick| Last Modified சனி, 24 அக்டோபர் 2020 (09:08 IST)
நேற்றைய ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி படுதோல்வி அடைந்த நிலையில் “இது தங்களுக்கு சரியான ஆண்டாக அமையவில்லை” என கேப்டன் தோனி கூறியுள்ளார்.

முதல் சுற்று முதலாக பல்வேறு நெருக்கடிகளால் தோல்வியை கண்டு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்றைய மும்பை இந்தியன்ஸூடனான ஆட்டத்தில் படுதோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இதுவரையில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் மட்டுமே வென்று தரவரிசை பட்டியலில் இடம் பெறாதது மட்டுமன்றி, ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதியை இழந்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே ப்ளே ஆஃப் செல்லாதது இதுவே முதல்முறை.

இதுகுறித்து பேசிய கேப்டன் தோனி “இந்த ஆண்டு எங்களுக்கு சரியானதாக அமையவில்லை. பேட்டிங்கில் சிஎஸ்கே வீரர்கள் பல சிரமங்களை சந்திக்க வேண்டி வந்தது. சோதனை முயற்சியாக 11 அணி தேர்வையும் மாற்றி பார்த்தோம். ஆனால் இது ஒரு நல்ல பாடமாக அமைந்தது. தொடர்ந்து வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்போ. அணியின் கேப்டனான நான் ஓடி ஒளிய மாட்டேன். அடுத்தடுத்த போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவேன்” என தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :