செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By
Last Updated : புதன், 4 நவம்பர் 2020 (17:25 IST)

ரோஹித் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்… ஏன் இந்திய அணிக்கு விளையாட முடியாது – சேவாக் குழப்பம்!

காயம் காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்துக்கு தேர்வு செய்யப்படாத

ரோஹித் ஷர்மா ஐபிஎல் தொடரில் விளையாடுவது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த மூன்று அணிகளிலுமே இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இடம்பெறவில்லை என சொல்லப்பட்டது. இதற்குக் காரணம் அவருக்கு ஏற்பட்டுள்ள காயமே என சொலல்ப்பட்டது.

இப்போது அவரது உடல்நிலையை பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது. இந்நிலையில் திடீரென்று நேற்று நடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் ஷர்மா களமிறங்கினார். இதனால் அவரின் காயம் குறித்த வெளிப்படை தன்மை ஒன்றும் தெரியவில்லை.  காயம் சரியாகிதான் அவர் விளையாடுகிறார் என்றால் ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெறுவாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள விரேந்திர சேவாக் ‘ரோஹித் ஷர்மா மும்பை அணிக்காக விளையாடுகிறார். ஆனால் காயம் காரணமாக ஆஸி தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை. இதை என்னால் புரிந்து கொள்ல முடியவில்லை. நேற்றைய போட்டியில் விளையாடி நான் உடற்தகுதியுடன் தான் இருக்கிறேன் என்கிறார் ரோஹித், பின் ஏன் அவரை இந்திய அணியில் எடுக்கவில்லை.

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆட முடியும் என்றால் ஏன் இந்திய அணிக்கு ஆட முடியாதா? இது பிசிசிஐயின் மோசமான நிர்வாகத்தைக் காட்டுகிறது. ’ எனக் கூறியுள்ளார்.