திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2019
Written By
Last Modified: ஞாயிறு, 31 மார்ச் 2019 (19:49 IST)

சென்னை Vs ராஜஸ்தான்: டாஸ் வென்ற ராஜஸ்தான்...

சென்னை  மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலானப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.
12 ஆவது ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பரபரப்புகளுக்குப் பஞ்சம் இல்லாமல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்  நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத இருக்கின்றன.
 
கடந்த 25ந் தேதி பஞ்சாப் அணியிடம் மோதிய ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது. அதேபோல் 29ந் தேதி ஹைதராபாத் அணியுடன் அடிய ஆட்டத்தில் ராஜஸ்தான் தோல்வியடைந்தது.
 
இந்நிலையில் இன்று சென்னை அணியுடன் மோதவிருக்கும் ராஜஸ்தான் டாசை வென்று முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. சென்னை அணி ஹாட்ரிக் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.