வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2018
Written By
Last Updated : செவ்வாய், 8 மே 2018 (16:37 IST)

பிளே ஆப் வாய்ப்பை இழந்த பெங்களூர் அணி

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி நேற்றைய போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
 
நேற்றைய போட்டி பெங்களூரு அணிக்கு வாழ்வா-சாவா? ஆட்டமாகும். இதில் தோல்வி கண்டால் பெங்களூரு அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு பறி போகிவிடும் என்ற நோக்கில் ஹைதராபாத் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 146 ரன்கள் எடுத்தது.
 
147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் வீழ்ச்சியினாலும், அபாரமான பந்துவீச்சினாலும் ரன்கள் எடுக்க திணறியது. இறுதியில் அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் வெற்றி பெற்றது.
 
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் அதிர்ஷடமில்லாத அணி என்று அழைக்கப்படும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நேற்றைய போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இதுவரை நடந்த ஒரு ஐபிஎல் தொடர்களிலும் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.