1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2017
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 8 மே 2017 (12:36 IST)

என்னை மன்னித்துவிடுங்கள் ப்ளீஸ்: கோலி டிவிட்டரில் வருத்தம்!!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடர்ந்து கேவலமாக ஆடி வருவதால் அணியை ரசிகர்கள் கேவலமாக விமர்சித்து வருகின்றனர். 

\
 
 
நேற்று தனது 10 வது தோல்வியைச் சந்தித்துள்ள பெங்களூரு அணி, இந்த முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் கேவலமான தோல்வியைத் தழுவியது.
 
இப்படியே விளையாடிக் கொண்டிருந்தால் எப்படி கப் கிடைக்கும் என்று ரசிகர்கள் கோபமாக கேட்டுக் கொண்டுள்ளனர். அணியின் கோப்பைக் கனவும் கிட்டத்தட்ட நிராசையாகிவிட்டது.
 
இப்படியே அடுத்தடுத்து தோற்று வருவதால் அணி மீதும், கேப்டன் கோஹ்லி மீதும் ரசிகர்கள் பாய ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் கோலி, ரசிகர்களின் நிபந்தனையற்ற அன்புக்கு நன்றி. ஆனால் சரியாக விளையாடாமல் போனதற்காக வருத்தப்படுகிறேன். எங்களது திறமைக்கேற்ப நாங்கள் விளையாடவில்லை. இது வருத்தம் தருகிறது என்று கூறியுள்ளார்.