1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2017
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 4 மே 2017 (21:57 IST)

ஐபிஎல்10 - சீறிப்பாய்ந்த குஜராத்; ரெய்னா அதிரடியில் 208 ரன்கள் குவிப்பு

ஐபிஎல் சீசன் 10 இன்றைய போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் அணி 208 குவித்து, டெல்லி அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
ஐபிஎல் 10வது சீசன் லீக் போட்டியில் இன்று குஜராத் - டெல்லி ஆகிய அணிகள் இடையே போட்டி நடைப்பெற்று வருகிறது. டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
 
20 ஓவர் முடிவில் குஜராத அணி 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்துள்ளது. குஜராத் அணியின் கேப்டன் ரெய்னா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அதிரடியில் குஜராத் அணி 200 ரன்களை கடந்தது. ரெய்னா 43 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். தினேஷ் கார்த்திக் 34 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார்.
 
இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என கடினமான இலக்குடன் டெல்லி அணி விளையாட உள்ளது.