புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2017
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 1 ஏப்ரல் 2017 (11:51 IST)

அடுத்தடுத்து வெளியேரும் வீரர்கள்: ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ஆப்பு!!

ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஸ்டார் வீரர் டிவிலியர்சும் இத்தொடரில் இருந்து விலகுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.


 
 
இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் டி-20 தொடரான ஐ.பி.எல். இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 5 துவங்குகிறது. காயம் காரணமாக முதல் வாரத்தில் நடக்கும் போட்டிகளில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே.
 
கோலி அணிக்கு திரும்பும் வரை கேப்டன் பொறுப்பை டிவிலியர்ஸ் ஏற்றபார் என அந்த அணியின் பயிற்சியாளர் அறிவித்தார். இந்நிலையில், டிவிலியர்சும் முதுகுவலி காரணமாக இத்தொடரில் இருந்து விலக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
ஐ.பி.எல்., போட்டிகள் துவங்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், அதற்குள் டிவிலியர்ஸ் முழுமையாக குணமடைய வாய்ப்பு குறைவு தான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டுதொடரில் இருந்து டிவிலியர்ஸ் முழுமையாக விலகவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.