தோழியிடம் வித்தியாசமாக திருமண சம்மதம் கேட்ட இந்திய டென்னிஸ் வீரர்

தோழியிடம் வித்தியாசமாக திருமண சம்மதம் கேட்ட இந்திய டென்னிஸ் வீரர்


Murugan| Last Modified வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (12:34 IST)
விழா ஒன்றில், இந்திய டென்னிஸ் வீரர் சகெத் மைனெனி தனது நீண்ட நாள் தோழியிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்ட நிகழ்வு பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 
கடந்த 14ம் தேதி, டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. அப்போது, இந்திய வீரர் சகெத் மைனெனி, தனது நீண்ட கால தோழி ஸ்ரீலட்சுமியின் முன் மண்டியிட்டு, கையில் ரோஜாப்பூவை கொடுத்து தன்னை திருமணம் செய்து கொள்வாயா? என்று கேட்டார்.
 
ஸ்ரீலட்சுமியும் அவரின் கோரிக்கையை வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே ஏற்றுக்கொண்டார். இதையடுத்து அவர்கள் இருவரும் கேக் வெட்டி அதைக் கொண்டாடினர். இந்த வருடத்தின் இறுதியில் திருமணம் நடைபெறும் என்று சகெத் கூறியுள்ளார்.


 

 
டேவிஸ் கோப்பை டென்னிசின்போது இப்படி ஒரு வித்தியாசமான திருமண நிச்சயத்தை நான் பார்த்தது இல்லை என்று, அவர்கள் நண்பரும், டென்னிஸ் வீரருமான லியாண்டர் பெயர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :