1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (00:01 IST)

முகம் பொலிவு பெற இந்த முறையை பயன்படுத்தி பாருங்க...!

ஆரஞ்சு பழச்சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து பயத்தாமாவில் முகத்தை கழுவி வர நல்ல முக அழகைப் பெறலாம்.
 
தக்காளியை நன்றாக பசைபோல் அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். இதனை ஒரு நாளைக்கு 2 அல்லது 3 தடவை செய்ய முகத்தில்  உள்ள கரும்புள்ளி நீங்கி நல்ல பொலிவை பெறும்.
 
கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து வந்தால் நாளடைவில் கறுப்பு நிறம்  போய்விடும்.
 
நல்ல கெட்டி தயிரை எடுத்து முகத்தில் பூசிவந்தால் முகம் நல்ல மென்மையடையும். பாலில் சிறிது தேன் கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவி வர  முகம் பொலிவு பெறும்.
 
இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். பாலாடை, தர்பூசணி பழச்சாறு, வெள்ளரிக்காய் சாறு இவற்றை சம அளவு எடுத்து சிறிதளவு பன்னீர் கலந்து முகத்தில் பூசி நன்றாக ஊறவைத்து கழுவி வர முகம் பளிச்சென்று மாறும்.