1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 18 ஜனவரி 2022 (17:59 IST)

எத்தகைய சிறப்புகளை கொண்டது பூச நட்சத்திரம் தெரியுமா...?

எந்த காரியமும் பூசத்தில் செய்தால் அல்லது தொடங்கினால் பூர்த்தி ஆகும் என்பார்கள். அதனால் திருமணத் தடை உள்ளவர்கள், பூச நட்சத்திரத்தில் திருமண பேச்சை தொடங்கினால் விரைவில் திருமணம் ஆகும் என்பது ஐதீகம்.


பள்ளியில் சேர்க்காத சிறு குழந்தைகளுக்கு, இந்த நாளில் வீட்டிலேயே கல்வியை தொடங்க அந்த குழந்தை முருகனைப் போல அறிவார்ந் த குழந்தையாக இருக்கும்.

உத்தராயண காலத்தின் தொடக்க மாதமான தை மாதம் பார்க்கப்படுகிறது. அதாவது தேவர்களின் பகல் பொழுது தொடங்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

சூரியனை நாராயணன் என சொன்னாலும், ஜோதிடத்தில் அவர் சிவனின் அம்சம். சந்திரன் சக்தியின் அம்சம். பெளர்ணமி என்பது சூரியன் - சந்திரன் ஒரே நேர்கோட்டில் நிற்பது தான். மகரம் எனும் புண்ணிய ராசியில் சூரியனும், தன் சொந்த வீட்டில் சந்திரனும் நிற்க தை பூச திருநாள் அமைகிறது.

மகாவிஷ்ணு தன் மார்பில் மகாலட்சுமியை வைத்திருக்கிறார். சிவபெருமானோ தன் உடலின் ஒரு பாகத்தை உமையாளுக்குக் கொடுத்திருக்கிறார். பிரம்மா தன் மனைவியான சரஸ்வதியை நாக்கிலே வைத்திருக்கிறார்.

முருகன் தான்னை வணங்கும் பக்தர்களை தன் மனதில் வைத்திருக்கிறார் என்பது புராணங்கள். முருகன் சோதித்து பார்ப்பார் என சொல்லப்பட்டாலும், அவர் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரக் கூடியவர்.