செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By
Last Updated : செவ்வாய், 6 மார்ச் 2018 (19:08 IST)

மூக்கில் ரத்தம் வழிகிறதா? பயப்படாமல் இதை செய்யுங்கள் போதும்

பருவநிலை மாற்றம் மற்றும் ஒருசில உடல்நலக் கோளாறு காரணமாக மூக்கில் ரத்தம் வடிதல் ஏற்படும்.

 
மூக்கில் ரத்தம் வடிந்தால் சிலர் உடனே பதற்றமடைவார்கள். அப்படி பதற்றமடையாமல் உட்கார்ந்தோ அல்லது நின்றுகொண்டோ சற்று முன்னால் சாய்ந்து கொண்டு மூக்கின் அடிப்புறம் உள்ள மென்மையான தசைப்பகுதியை கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டிவிரகளால் அழுத்திப்பிடித்துக் கொண்டு வாய் வழியே சுவாசிக்கவும்.
 
இப்படி செய்வது மூலம் ரத்தம் வடிதல் நின்றுபோகும். மேலும் மூக்கில் ரத்தம் வடிவதை நிறுத்த சில மூலிகைகள் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
 
மூக்கில் இரத்தம் வடியும்போது தர்ப்பை புல் சாறை சில துளிகள் மூக்கில் விட இரத்தம் வெளியேறுவது நிற்கும். 
 
மஞ்சளைத் தேனில் குழைத்து மூக்கின் மேல்புறம் தடவி வர இரத்தம் வெளியேறுவது நின்றுவிடும். 
 
சோற்றுக் கற்றாளை ஜெல்லை மெல்லிய துணியில் கட்டி மூக்கினுள் சற்றுநேரம் வைத்துவர இரத்தக் கசிவு நின்றுவிடும்.