வேலை செய்ய மறுத்ததால்; பெண்ணின் மூக்கை வெட்டிய கொடூரம்!!
மத்தியப்பிரேதசத்தில் வேலை செய்ய மறுத்ததால் தலித் பெண்ணின் மூக்கு வெட்டபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரேதசத்தில் உள்ள ராஸா கிராமத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த ஜானகி பாய் அவரது கணவர் ராகவேந்தராவுடன் நரேந்திர சிங் என்பவருடைய நிலத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நரேந்திர சிங், ஜான்கி பாயை நிலத்திற்கு பூச்சி மருந்து தெளிக்குமாறு கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஜானகி மற்றும் அவரது கணவரை தாக்கியுள்ளனர்.
இது குறித்து ஜானகி போலீசில் புகார் அளிக்க சென்ற போது மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போதுதான் நரேந்திர சிங் கோடாரியால் ஜானகியின் முகத்தில் தாக்கியது பொது அவரது மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதன் பின்னர் மத்தியப்பிரேதச மாநிலம் மகளிர் அமைப்பின் குறை தீர்க்கும் முகாமில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதவு செய்து தலைமறைவாகியுள்ள நரேந்திர சிங்கை தேடி வருகின்றனர்.