1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Tomato Face Pack to help maintain a glowing face !!

முகத்தை பளபளப்பாக பராமரிக்க உதவும் தக்காளி ஃபேஸ் பேக் !!

தக்காளி
ஆப்பிள் பழத்தை தோல் நீக்கி அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி நன்கு ஊறிய பிறகு குளித்தால் முகச் சுருக்கம், பருக்கள் போன்றவை ஏற்படாது. மேலும் முகம் பொலிவு பெறும்.

* புதினா, கொத்தமல்லி அல்லது கருவேப்பிலை இவற்றுள் ஏதாவது ஒன்றை துவையல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் சோம்பல் ஏற்படாமல்  இருக்கும்.
 
* தக்காளி ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட். இதை வைத்து ஃபேஸ் பேக் செய்வதால், சருமத்தில் உள்ள அழுக்கினை நீக்கி சருமத்தை இளமையாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.
 
* பிழிந்த எலுமிச்சம் பழத்தோலை மோர் அல்லது தயிருடன் சேர்த்து முகத்தில் நன்கு தேய்த்துக் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
 
* பெண்களுக்கு உதட்டின் மேல் மற்றும் கீழ் தாடைகளில் வளரும் முடிகளை அகற்ற சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பை நீரில் கலந்து முடிகளின் மேல் மெதுவாக தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் முடி நாளடைவில் உதிர்ந்துவிடும். மேலும் அந்த இடத்தில் முடி முளைக்காது.
 
* முகத்தில் உள்ள துவாரங்களை போக்க ஒரு குச்சியில் பஞ்சை சுற்றி அதை எலுமிச்சை சாறில் நனைத்து துவாரங்கள் இருக்கும் இடத்தில் தடவினால் துவாரங்கள் அடைபட்டு விடும்.
 
* வேகவைத்த தக்காளியோடு, சிறிது எலுமிச்சை பழச்சாற்றை விட்டு முகத்தில் தடவி, காய்ந்ததும் அதனை தண்ணீரால் கழுவி வந்தால், முகம் பொலிவுடன்  காணப்படும்.
 
* காலில் உள்ள நகங்களை உப்பு கலந்த நீரில் பாத்து நிமிடம் ஊறவைத்து பிறகு பழைய பிரஷ்ஷினால் தேய்த்தால் நகங்கள் சுத்தமாகும். மேலும் கிருமிகள்  அழிந்து விடும்.
About Writer
Sasikala