செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By sinoj kiyan
Last Modified: ஞாயிறு, 5 ஜனவரி 2020 (15:53 IST)

சருமத்தை பொலிவோடு வைத்துக்கொள்ள உதவும் ஓட்ஸ் ஃபேஸ் ஸ்கரப்!!

சருமம் பட்டுப் போன்று இருப்பதற்கு, இயற்கை பொருட்களை கொண்டு ஸ்கரப் செய்வதால் நல்ல பலன் கிடைக்கும். ஓட்ஸ் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பொருட்களில் ஒன்றாக இருப்பதோடு, சருமத்திற்கு அழகூட்டும் பொருளாகவும் பயன்படுகிறது.
ஓட்ஸை பொடி செய்து, ஒரு டேபிள் ஸ்பூன் தேனுடன் சேர்த்து கலந்து முகத்திற்கு தடவி 5 முதல் 10 நிமிடம் மென்மையாக மசாஜ் போல்  செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவவேண்டும். இதனால் சருமத்துளைகளில் உள்ள அழக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் பொலிவோடு  காணப்படும்.
 
ஓட்ஸை பொடி செய்து, 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்திற்கு தடவி, ஸ்கரப் செய்து கழுவுவதால் முகம் நன்கு  பளிச்சென்று காணப்படும்.
 
ஓட்ஸ் மற்றும் ஆலிவ் ஆயிலை சேர்த்து செய்வது என்பது ஒரு சிறந்த . இவற்றை வைத்து ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் குறைந்து, இளமையான தோற்றத்தை பெறலாம்.
 
ஓட்ஸ் உடன் தக்காளி சாற்றை விட்டு ஸ்கரப் செய்தால், முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்கிவிடும். மேலும் ஓட்ஸை வைத்து ஸ்கரப் செய்வதால் சருமத்துளைகள் ஆரோக்கியம் அடைவது மட்டுமல்லாமல் சருமத்தின் நிறமும் கூடும்.
 
ஓட்ஸை முதல் நாள் இரவிலேயே ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊறவைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் காணலாம்.
 
ஓட்ஸை இந்த பொருட்களோடு சேர்த்து ஸ்கரப் செய்து வந்தால், சருமம் அழகோடும், பொலிவோடும் இருப்பதோடு, சருமத்தை பட்டுப்  போன்றும் வைத்துக் கொள்ள முடியும்.