ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

சருமம் பளப்பளப்பாக வைத்திருக்க உதவும் ஆலிவ் ஆயில்...!!

சருமம் பளப்பளப்பாக மாற ஆலிவ் ஆயில் அதிகமாக பயன்படுகிறது. இரண்டு துண்டுகள் பப்பாளியை தண்ணீர் சேர்க்காமல் மிக்சியில் அரைத்து தனியாக வைத்து கொள்ளவும். 
இதனுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து சருமத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ்  செய்யவும். பின்பு 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின்பு சருமத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை, இந்த முறையை செய்து வர சருமம் மென்மையாகவும் பொலிவுடனும் காணப்படும்.
 
ஆலிவ் எண்ணெயில் கொஞ்சம் சர்க்கரை கலந்து, உதடுகளில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்வதால், இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
காட்டனை ஆலிவ் எண்ணெயில் நனைத்து மஸ்காரா, காஜல் போன்றவற்றை நீக்கலாம். இதனால் கண்களில் ஏற்படும் பாதிப்பை  கட்டுப்படுத்தலாம். 
 
ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி படுத்தால் முகத்தில் இருக்கும். அழுக்குகள் வெளிவருவதோடு, வயதான தோற்றத்தையும் கட்டுப்படுத்தும். மேலும் இதை உதடுகளில் தடவினால் உதட்டில் வெடிப்பு ஏற்படாமல் மென்மையாக பிங்க் நிறத்தில் மாறும்.
 
குளிப்பதற்கு முன் முகத்தில் ஆலிவ் ஆயிலுடன் சிறிது வினிகரை கலந்து தடவி ஊறவைத்து பின் வெதுவெதுப்பான தன்ணீரில் குளித்தால் சூரியக் கதிரினால் சருமம் பாதிப்படைவதைத் தடுக்கலாம்.