வியாழன், 29 ஜனவரி 2026
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 2 நவம்பர் 2022 (11:39 IST)

கரும்புள்ளிகளால் கவலையா… இதோ இருக்கு ஹோம் டிப்ஸ்!!

கரும்புள்ளிகளால் கவலையா… இதோ இருக்கு ஹோம் டிப்ஸ்!!
முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை வீட்டில் இருக்கும் பொருட்கள் கொண்டே அகற்ற முடியும். இவை குறித்து ஹோம் டிப்ஸ் இதோ…


பெரும்பாலும் கரும்புள்ளிகள் முகத்தில் அதிகப்படியான எண்ணெய் பசையாலும் அல்லது வறண்ட் சருமத்தாலும் வரக்கூடும். இதை நீக்குவது சுலபமான காரியம் இல்லையென்றாலும் இது குறித்து கவலைக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. வீட்டில் இருந்த படி கரும்புள்ளிகளை சரும பாதிப்பு இல்லாமல் நீக்க…
  1. எலுமிச்சை சாறுடன், வெள்ளை சர்க்கரை சேர்த்து முகத்தில் தேய்த்து 2 – 3 நிமிடங்கள் மசாஜ் செய்யலாம்.
  2. உருளைக்கிழங்கை பேஸ்ட் போல அறைத்து 15 நிமிடங்கள் வரை முகத்தில் வைத்திருந்து குளிர் நீரில் கழுவலாம்.
  3. கொத்தமல்லி தழையுடன் மஞ்சள் தூள் சேர்த்து அறைத்து முகத்தில் தடவி சிறிது நேரத்திற்கு பின்னர் கழுவலாம்.
  4. வெறும் எலுமிச்சை சாறினை எடுத்து பஞ்சில் நினைத்து முகத்தில் தேய்த்து 5 - 6 நிமிடங்கள் வைத்து பின்னர் கழுவலாம்.
  5. தயிர் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து தடவி வரலாம்.
  6. வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் தடவி காயும் வரை அப்படியே விட்டு பின்னர் கழுவ வேண்டும்.
Edited By: Sugapriya Prakash