செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sinoj
Last Modified: திங்கள், 14 பிப்ரவரி 2022 (17:24 IST)

தினமும் நெல்லிக்காய் சாறு அருந்துவதால் என்ன பயன் தெரியுமா....?

ஒரு மனிதனுக்கு தினசரி 50 மி.கி அளவுக்கு வைட்டமின் ‘சி’ தேவைப்படுகிறது. இந்தத் தேவையை நெல்லிக்கனி உண்பதன் மூலமாக எளிதில் பெற்றுவிட முடியும். நெல்லிக்காயில் நிறைந்திருக்கும் வைட்டமின் ‘சி’ ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை சுலபமாகக் கரைத்திடும். எனவே,  மாரடைப்பைத் தவிர்க்கலாம். 
 
தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றைக் குடித்தால், உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளை நீக்கி, உடல்  எடையைக் குறைக்க முடியும்.
 
நெல்லிக்காய் சாறு மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்த கலவையை இரவில் கூந்தலில் தேய்த்து, காலையில் கழுவிவிடலாம். விரைவில் கூந்தல் கறுப்பாக மாறும்.
 
நெல்லிக்கனியை தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிட, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு உயரும. அழகான சருமத்தையும் பெறமுடியும். முடி  கொட்டும் பிரச்சனையை முடிவு கட்டும். புதிதாக முடிகள் வளரும்.
 
நெல்லிக்காய் சாறு தயாரித்து, அதைப் பருகுவதன் மூலம் ரத்தசோகை, குடல் புண், சர்க்கரைநோய், கண் நோய்களிலிருந்து விடுபடலாம். கண் பார்வை கூர்மையாகும்.. மாலைக்கண் வியாதி நீங்கும்.
 
தேனுடன் சேர்த்து அருந்தி வந்தால், சக்கரை வியாதியிலிருந்து விடுதலை கிடைக்கும். மேலும் மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகளை தீர்க்கும்.