1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
  4. People desire to rock as US president

மக்கள் விரும்பினால் அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன்! – அதிர்ச்சியளித்த ராக்!

Hollywood
மக்கள் விரும்பினால் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என ஹாலிவுட் நடிகர் ராக் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட்டில் ஜுமாஞ்சி, பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ட்வெய்ன் ஜான்சன். ஹாலிவுட் படங்களில் நடிப்பதற்கு முன்னதாக ரெஸ்லிங் போட்டிகளில் போட்டியிட்டு வந்த இவரின் ரிங் பெயர் தி ராக் என்பதால் பலரும் இன்றும் அவரை ராக் என்றே அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் தனியார் அமைப்பு ஒன்று அமெரிக்க அதிபராக மக்கள் யாரை விரும்புகிறார்கள் என கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் 46 சதவீத மக்கள் ட்வெய்ன் ஜான்சன் அதிபராக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள ராக் என்னும் ட்வெய்ன் ஜான்சன் “இதை நான் பெரிய விசயமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு வேளை மக்கள் விரும்பினால் மக்களுக்கு சேவை செய்ய தயார்” என்று பதிலளித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!