1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (12:03 IST)

யப்பா சாமி முடியலப்பா… இணையத்தில் ட்ரோல் ஆகும் ராஜா ராணி சீரியல் ப்ரோமோ!

ராஜா ராணி சீரியலில் இப்போது சந்தியா ஒரு வழியாக போலீஸ் வேலைக்கு படிக்க ஒத்துக் கொண்டு விட்டார்.

ராஜா ராணி 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் ஆலியா மானசாவுக்கு பதிலாக செம்பருத்தி ஷபானா நடிக்க இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல தொலைக்காட்சி நடிகர் சஞ்சீவ் மனைவியும் ராஜா ராணி  என்ற தொடரின் மூலம் புகழ் பெற்றவரான ஆலியா மானசா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதால் அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.
அவருக்குப் பதிலாக ரியா என்பவர் இப்போது நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாகவே சந்தியாவை எப்படியாவது போலீஸ் ஆக்கியே தீருவேன் என கங்கனம் கட்டிக்கொண்டு திரிகிறார் சரவணன். இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள புதிய ப்ரோமோ கவனத்தை ஈர்த்துள்ளது.

என்னத்தையாவது படிங்க சந்தியா

இப்போது வெளியாகி இருக்கும் புதிய ப்ரோமோவில் வீட்டுக்கு தெரியாமல் சந்தியாவுக்கு ரூமிலேயே இடம் ஏற்பாடு செய்து தருகிறார் சரவணன் ( ஒரு மேஜையும் ஒரு குண்டு பல்ப்பும்). அதை செய்து கொடுத்து படிங்க சந்தியா எனக் கூற அதற்கு ‘இன்னமும் புத்தகம் வாங்கலங்க’ என சந்தியா அப்பாவியாக கூற, அருகில் இருக்கும் ஏதோ ஒரு புத்தகத்தைக் கொடுத்து இதைப்படிங்க என சரவணன் கூறுகிறார். அதையும் வாங்கி படிக்க ஆரம்பிக்கிறார் சந்தியா.

டீ போடும் சரவணன்

இதற்கிடையில் மும்முரமாகப் படிக்கும் சந்தியாவுக்கு டீ போட்டுத் தருகிறேன் என சரவணன் சொல்ல, “வேண்டாம் அம்மா பாத்துட்டா பிரச்சன ஆயிடும்” என சமாளிக்கிறார் சந்தியா. உடனே அங்கே இருக்கும் புத்தகங்களை எடுத்து “டி போடுவது கை காலை சரவணன் ஆட்ட நெகிழ்ந்து போகிறார் சந்தியா.” இப்படி போகிறது அந்த ப்ரோமோ.