திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (08:45 IST)

அடிச்சது தப்புதான்… மன்னிச்சிடுங்க..! – பகிரங்க மன்னிப்பு கேட்ட வில் ஸ்மித்!

ஆஸ்கர் விழா மேடையில் சக நடிகரை அறைந்ததற்கு நடிகர் வில் ஸ்மித் பொதுவில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

94வது ஆஸ்கர் விருது விழா நேற்று நடந்த நிலையில் பல்வேறு பிரிவுகளில் பல படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்த நடிகர் வில் ஸ்மித்திற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

அப்போது விழா மேடையில் பேசிய நகைச்சுவை நடிகரும், தொகுப்பாளருமான கிறிஸ் ராக், ஸ்மித்தின் மனைவி குறித்து உருவகேலி செய்யும் வகையில் ஜோக் அடித்ததால் ஆத்திரம் அடைந்த வில் ஸ்மித் மேடையேறி சென்று கிறிஸ்சை பளார் என அறைந்தார். இந்த சம்பவம் நேற்று முதலாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வில் ஸ்மித்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ள வில் ஸ்மித் ” வன்முறை அதன் அனைத்து வடிவங்களிலும் விஷமானது மற்றும் அழிவுகரமானது. நேற்றிரவு நடந்த அகாடமி விருதுகளில் எனது நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மன்னிக்க முடியாதது. எனது செலவில் நகைச்சுவைகள் வேலையின் ஒரு பகுதியாகும், ஆனால் ஜாடாவின் உடல்நிலை குறித்த நகைச்சுவை என்னால் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாக இருந்தது, நான் உணர்ச்சிவசப்பட்டு பதிலளித்தேன்.

நான் உங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன், கிறிஸ். நான் வரம்புக்கு வெளியே இருந்தேன், நான் தவறு செய்தேன். நான் வெட்கப்படுகிறேன், எனது செயல்கள் நான் இருக்க விரும்பும் மனிதனைக் குறிக்கவில்லை. அன்பும் கருணையும் நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை.

அகாடமி, நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் பார்க்கும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். வில்லியம்ஸ் குடும்பத்தினரிடமும் எனது கிங் ரிச்சர்ட் குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். மற்றபடி நம் அனைவருக்கும் ஒரு அழகான பயணமாக இருந்ததை எனது நடத்தை கறைபடுத்தியதற்கு நான் ஆழமாக வருந்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.