நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு ஸ்மார்ட்போன் பரிசளித்த விஜய் ரசிகர்கள்
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு ஸ்மார்ட்போன் பரிசளித்த விஜய் ரசிகர்கள்
நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஒருவருக்கு விஜய் ரசிகர்கள் ஸ்மார்ட்போனை பரிசாக அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
சமீபத்தில் நடந்த நீட் தேர்வின் முடிவுகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியாகின என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஐ நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவிக்கு ஸ்மார்ட்போனை விஜய் ரசிகர்கள் பரிசளித்தனர்
கோவையைச் சேர்ந்த பழங்குடியின மாணவி சங்கவி என்பவர் கடும் வறுமையிலும் கடினமாக படித்து நீட் தேர்வு தேர்ச்சி பெற்றுள்ளார். இதனை அடுத்து அந்த மாணவிக்கு ரூபாய் 17 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போன் வாங்கி ஒரு வருடத்திற்கான ரீசார்ஜ் செய்து விஜய் ரசிகர்கள் உதவி செய்துள்ளனர்