புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 செப்டம்பர் 2020 (12:17 IST)

விண்வெளிக்கு போறோம்; மாஸ் காட்டுறோம்! – டாம் க்ரூஸின் விண்வெளி பயணம் தயார்!

அதிரடி ஆக்‌ஷன் ஹாலிவுட் நடிகரான டாம் க்ரூஸ் தனது அடுத்த படப்பிடிப்பை விண்வெளியில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் க்ரூஸ் தனது படங்களின் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை டூப் இல்லாமல் தானே செய்யக்கூடியவர். இவரது பிரபல படங்களான மிஷன் இம்பாஸிபிள் படங்களுக்காக உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா கட்டிடத்தில் ஏறியது, நடுவானில் விமானத்திலிருந்து குதித்தது உள்ளிட்ட ஏகப்பட்ட சாகச சம்பவங்களை செய்துள்ளார்.

இவரது அடுத்த பட ஷூட்டிங்கை நேரடியாக விண்வெளியில் நடத்த திட்டமிட்டு வருவதாக ஹாலிவுட் வட்டாரத்தில் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விண்வெளியில் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனைத்து பணிகளையும் தொடங்கியுள்ளார் டாம் க்ரூஸ்.

இந்நிலையில் சமீபத்தில் ஸ்பேஸ் ஹட்டில் அல்மனாக் நிறுவனம் ஒரு புதிய விண்கலத்தையும், அதில் பயணிக்க உள்ளோரின் பெயரையும் வெளியிட்டுள்ளது. அதில் டாம் க்ரூஸ் மற்றும் இயக்குனர் டக் லிமான் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இதன்மூலமாக அக்டோபர் மாதத்தில் டாம் க்ரூஸின் விண்வெளி பயணம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகிலேயே முதன்முறையாக விண்வெளியில் நேரடியாக ஷூட்டிங் செய்யப்படும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.