1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By siva
Last Updated : திங்கள், 23 மே 2022 (19:16 IST)

மிஸன் இம்பாஸிபிள்: வேற லெவல் டிரைலர் வைரல்!

mission
மிஸன் இம்பாஸிபிள்: வேற லெவல் டிரைலர் வைரல்!
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடித்த மிஷன் இம்பாசிபிள் என்ற திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ டிரைலர் வெளியாகியுள்ளது 
 
இந்த டிரைலர் நேற்று திடீரென இணையத்தில் கசிந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது 
 
இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஓடும் இந்த ட்ரைலரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் வழக்கம்போல் இடம்பெற்றுள்ளன. இந்த படத்தின் ட்ரெய்லர் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 
 
அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த படத்திற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது