புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (08:39 IST)

இணையத்தில் லீக் ஆன ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்..! மார்வெல் செய்த வேலை! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மார்வெலின் புதிய படமான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர்ஹீரோ படங்களை தயாரித்து உலக அளவில் ரசிகர்களை பெற்றுள்ள ஹாலிவுட் நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ். மார்வெலின் ஷாங் ச்சி மற்றும் எட்டர்னல்ஸ் ஆகிய படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளன.

லோகி வெப் சிர்ஸில் மல்டிவெர்ஸ் திறந்ததை தொடர்ந்து ரசிகர்கள் ஸ்பைடர்மேன் படத்தை தீவிரமாக எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்பு ஸ்பைடர்மேன் நோ வே ஹோ பட ட்ரைலர் இணையத்தில் லீக் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனே சுதாரித்துக் கொண்ட மார்வெல் ஸ்டுடியோஸ் ஒரிஜினல் ட்ரெய்லரை தங்களது யூட்யூபில் வெளியிட்டுள்ளனர். திடீரென விடியற்காலையில் வெளியான ஸ்பைடர்மேன் ட்ரெய்லர் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் இந்த ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

தமிழ் ட்ரெய்லரை காண…