1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. rajinikanth started to write his biograpy

சுயசரிதியை எழுத துவங்கியிருக்கும் ரஜினி!.. சௌந்தர்யா கொடுத்த அப்டேட்!...

rajini biography book
50 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த். இவரின் படங்கள் வசூலை வாரி குவித்ததால் இவருக்கு சூப்பர் ஸ்டார் என்கிற பட்டமும் கிடைத்தது
. ரஜினிகாந்த் தனது திரை வாழ்வில் பல அனுபவங்களை கடந்து வந்திருக்கிறார். சினிமா கெரியரில் மட்டுமில்லாமல் அரசியலிலும் ரஜினி களமாடியிருக்கிறார்.

குறிப்பாக பாட்ஷா பட விழாவில் அவர் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து பேச அது ரஜினியை அரசியலுக்கு இழுத்து சென்றது. ஆனால் அரசியலுக்கு வருவேன் என 25 வருடங்களாக சொல்லி வந்த ரஜினி ஒரு கட்டத்தில் தனது உடல் நிலையை காரணம் காட்டி அதிலிருந்து விலகினார்.

தற்போது நடிப்பில் மட்டுமே ரஜினி கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில்தான் ரஜினி தனது பயோகிராபியை எழுதப் போவதாக சில வருடங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. ஆனால் அதன்பின் அதைப்பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

இந்நிலையில்தான் அப்பா தனது பயோகிராபியை எழுத துவங்கியிருக்கிறார்.. அப்பாவின் வாழ்க்கை வரலாறு கண்டிப்பாக குளோபல் சென்சேஷன் ஆகும்\ என்று சொல்லி ஹைப் ஏத்தியிருக்கிறார் சௌந்தர்யா...
அடுத்த கட்டுரையில்
அதிக சம்பளம் வாங்கினா பெரிய ஹீரோவா?!.. ரஜினி, விஜயை அட்டாக் பண்ணும் ராதாரவி...