1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Siva
Last Modified திங்கள், 5 டிசம்பர் 2022 (16:57 IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்

murmu
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஜனாதிபதி திரெளபதி முர்மு 2 நாள் சுற்றுப்பயணமாக ஆந்திராவுக்கு வருகை தந்த நிலையில் அவருக்கு ஆந்திர துணை முதலமைச்சர் மற்றும் கவர்னர் வரவேற்பு கொடுத்தனர் 
 
இதனையடுத்து ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று 9:25 வராக சுவாமி கோவிலும் ஒன்பது முப்பது மணிக்கு ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து அவருக்கு லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
 
திருப்பதியில் உள்ள மகளிர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Siva