திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Siva
Last Updated : திங்கள், 28 நவம்பர் 2022 (18:41 IST)

திருப்பதியில் குவியும் பக்தர்கள்.. இலவச தரிசனத்திற்கு 30 மணி நேரம்!

tirupathi
திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் 30 மணிநேரம் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
நேற்று தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் இன்று இரவு தான் தரிசனம் செய்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சனி ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் திருப்பதிக்கு ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனத்திற்கு காத்திருந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
இலவச தரிசனத்திற்கு தரிசனத்திற்கு டோக்கன் பெறாதவர்கள் 30 மணி நேரம் காத்திருந்ததாகவும், ஆனால் இலவச தரிசன டோக்கன் பெற்றவர்கள் 3 முதல் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மேலும் திருப்பதியில் இலவச டோக்கன் வாங்க ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva