1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By siva
Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2020 (18:01 IST)

நிவர் விடுமுறை: மூக்குத்தி அம்மனுக்கு அதிகரிக்கும் மவுசு

நிவர் புயல் காரணமாக இன்று மதியமே அரசு ஊழியர்கள் வீட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பப்பட்டு விட்டனர் என்பது தெரிந்ததே. மேலும் நாளையும் அரசு விடுமுறை என்றும் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் பொதுமக்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு தொலைக்காட்சி தான் என்பதால் முழுக்க முழுக்க பொது மக்கள் தொலைக்காட்சியில் மூழ்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக சமீபத்தில் ஓடிடியில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை பார்ப்பதில் பலரும் முன்வந்துள்ளதாகவும் இதனால் ஓடிடியில் மூக்குத்தி அம்மன் படத்தை பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
ஏற்கனவே மூக்குத்தி அம்மன் படத்திற்கு பாசிட்டிவ் ரிசல்ட் வெளிவந்ததை அடுத்து தற்போது படத்தை பார்க்காதவர்கள் முதல்முறையாக பார்த்தும், பார்த்தவர்கள் மீண்டும் மீண்டும் பார்த்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன