ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 19 டிசம்பர் 2022 (22:57 IST)

ஹாலிவுட் நடிகர் பட ஸ்டண்ட் காட்சியை பாராட்டிய சூர்யா

top gun - tom cruise
ஹாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் டாக் குரூஸ். இவர் நடிக்கும் ஒவ்வொரு படமும், அதிரடி ஆக்சன், திரில்லராக இருக்கும்.

அந்த வகையில், இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான மிஸன் இம்மாசிபிள் என்ற படத்தில் தொடர்ச்சியாக பாகங்கள் 2000, 2006, 2011, 2015, 2018, ஆகிய ஆண்டுகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில், தற்போது மிசன் இம்பாசிபிள் படத்தின் அடுத்த பாகம் தயாராகி வருகிறது.

இதன் மேக்கிங் வீடியோவை இன்று டாம்குரூஸ் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளிட்டிருந்தார்.
இது இணையதளத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், நடிகர் சூர்யா, டாம்குரூஸின் ஸ்டண்ட் காட்சிகளைப் பார்த்து,   நம்பமுடியவில்லை!!! வாவ் என்று தெரிவித்துள்ளார்.

டூவிலரில் வரும் 60 வயதான டாம்குரூஸ் ஒரு பள்ளத்தாக்கில் பாரசூட்டுடன் டைவ் அடிப்பதும், ஹெலிகாப்டரில் இருந்து அதை ஷுட் செய்தனர்.