நடிகர்களுக்கு அளித்த பட்டங்கள்.. தெலுங்கு திரையுலக ரசிகர்களின் காரசாரமான மோதல்..!
தெலுங்கு திரையுலகில் நடிகர்களுக்கு வழங்கப்படும் நேச்சுரல் ஸ்டார் நானி, மேன் ஆஃப் மாஸஸ் என்.டி.ஆர், ரெபல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் ராக்கிங் ஸ்டார் யாஷ் போன்ற பட்டங்கள் குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் பெரும் மோதலாக வெடித்துள்ளது.
பிரின்ஸ் எனும் எக்ஸ் பயனர், இந்த பட்டங்கள் அனைத்தும் மிகவும் Cringe என ஒரு போஸ்டரைப் பகிர, அது 10,000-க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் ஆயிரக்கணக்கான காரசாரமான பதில்களையும் குவித்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தெலுங்கு ரசிகர்கள் புஷ்பா, பாகுபலி, கே.ஜி.எஃப் போன்ற பிரம்மாண்ட வெற்றி படங்களுக்காக தங்கள் நாயகர்கள் கடினமாக உழைத்து பெற்ற கௌரவம் இது என தற்காத்து பேசி வருகின்றனர்.
அதே சமயம், பாலிவுட் ரசிகர்கள் தங்கள் பங்கிற்கு சில உதாரணங்களை காட்டி விமர்சிக்க, ரசிகர்களுக்கிடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியது. ஒரு நடிகரின் அடையாளம் அவரது உழைப்பிலா அல்லது இத்தகைய பகட்டான பட்டங்களிலா என்ற விவாதம் தற்போது சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
தெலுங்கு திரைப்பட விளம்பரங்களில் உள்ள அதீத நாடகத்தன்மை மீதான விமர்சனமாகவும் இது பார்க்கப்படுகிறது.
Edited by Siva