'தாய் கிழவி வாரா'.. சிவகார்த்திகேயன் குரலில் துள்ளலான பாடல் ரிலீஸ்..!
இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' திரைப்படத்தின் முதல் பாடலான 'தாய் கிழவி வாரா' வெளியாகியுள்ளது. இப்பாடலில் ராதிகா சரத்குமார் ஒரு அதிரடியான பாட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் துள்ளலான குரலில், நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையில் வெளிவந்துள்ள இந்த பாடல், நாட்டுப்புற கலை நயத்துடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கருமாத்தூர் மணிமாறன் இப்பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார்.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ராதிகாவுடன் பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கிராமிய மணம் மாறாத நடனம் மற்றும் தாளங்களுடன் கூடிய இப்பாடலை, தனது 'ஆட்டிடியூட் ஆந்தம்' என ராதிகா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் எனர்ஜியையும், ராதிகாவின் கம்பீரத்தையும் கொண்டாடி வருகின்றனர். இப்படம் வரும் பிப்ரவரி 20 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது ஒரு குடும்பங்கள் கொண்டாடும் திருவிழாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva