1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (11:01 IST)

மனித இனத்தின் முடிவு.. டைனோசர்களின் ஆரம்பம்! – ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் ட்ரெய்லர்!

பிரபலமான ஜுராசிக் திரைப்பட வரிசையில் கடைசி படமான டொமினியன் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

1993ல் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான படம் ஜுராசிக் பார்க். டைனோசர்கள் குறித்து வெளியான இந்த படம் இதுநாள் வரை உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளது. அதை தொடர்ந்து தி லாஸ்ட் வேர்ல்ட், ஜுராசிக் பார்க் 3 ஆகிய பாகங்களும் வெளியாகின.

அதன்பின்னர் நீண்ட ஆண்டுகள் கழித்து 2015ம் ஆண்டில் ஜுராசிக் பார்க்கின் தொடர்ச்சியாக ஜுராசிக் வேர்ல்ட் படங்கள் வெளியாக தொடங்கின. ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலஜியின் இறுதி படமான டொமினியன் இந்த ஆண்டு ஜூன் மாதம் 10ம் தேதி வெளியாக உள்ளது.

தீவிலிருந்து மக்கள் வாழும் உலகிற்குள் நுழைந்த டைனோசர்கள் கட்டுப்படுத்தப்பட்டதா அல்லது டைனோசர்களால் மனிதர்களின் அழிவு தொடங்கியதா என்பதை கருவாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அனைத்து மொழி ட்ரெய்லர்களும் தற்போது வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு பலருக்கும் அதிகரித்துள்ளது.

ஜுராசிக் வேர்ல்ட் படத்தின் தமிழ் ட்ரெய்லரை காண…