1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified வெள்ளி, 11 நவம்பர் 2022 (11:29 IST)

விடியிறதுகுள்ள ஒருத்தன்தான் உயிரோட இருப்பான்..? – ஜான் விக் 4 அதிரடி தமிழ் ட்ரெய்லர்!

John Wick
ஹாலிவுட் ரசிகர்களிடையே பிரபலமான ஜான் விக் பட வரிசையில் நான்காவது பாகத்திற்கான ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்திய ரசிகர்களிடையே பிரபலமாக உள்ள ஹாலிவுட் பட தொடர்களில் முக்கியமான ஒன்று ஜான் விக் திரைப்படம். இதில் பிரபல ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸ், ஜான் விக் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தின் முதல் மூன்று பாகங்கள் முன்னதாக வெளியாகி உலகம் முழுவதும் பெரும் ரசிகர்களை சம்பாதித்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு நான்காம் பாகம் வெளியாக உள்ளது.

சாட் ஸ்டெஹெல்ஸ்கி இயக்கியுள்ள இந்த படத்தில் கீனு ரீவ்ஸ், டோனி யென், ஸ்காட் அட்கின்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நான்காம் பாகத்தில் ஸ்காட் அட்கின்ஸுடன் ஜான் விக் ஒரு இரவு நேர விளையாட்டில் கலந்து கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார். இந்த ஆட்டம் இரவில் தொடங்கி பொழுது விடியும்போது முடியும் என்றும், பொழுது விடியும்போது ஒருவர் மட்டுமே உயிரோடு இருப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

பரபரப்பான ஆக்‌ஷன், அதிரடி காட்சிகளுடன் நடக்கும் இந்த பரபரப்பான கதையில் யார் வெல்ல போகிறார்கள் என்பதை அடுத்த ஆண்டு 2023ல் மார்ச் 24ல் திரையரங்குகளில் காணலாம். தற்போது இந்த படத்தின் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழி ட்ரெய்லர்களும் வெளியாகி வைரலாகியுள்ளது.

Edit By Prasanth.K