புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 5 ஜூன் 2020 (15:13 IST)

முழு நிர்வாண புகைப்படத்தை ஏலம் விட்டு கொரோனா நிதி திரட்டும் பிரபல நடிகை!

கொரோனா நோய் தொற்றினால் உலகம் முழுக்க ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதால் சாதாரண மக்கள் வாழ கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனர். இதனால் இருப்பவர்கள் இல்லாதவர்க்ளுக்கு உதவி வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில் பிரபல நடிகர்கள், பாடகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் தங்களால் முடித்த உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பிரபல அமெரிக்க நடிகையும், புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டின் முன்னாள் மனைவியுமான ஜெனிஃபர் அனிஸ்டன் தனது முழு நிர்வாண புகைப்படத்தை ஏலம் விட்டு அதிலிருந்து கிடைக்கும் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்குகிறார்.

முழு நிர்வாணமாக தனது கை மற்றும் கால்களை மறைத்தபடி அமர்ந்திருக்கும் இந்த புகைப்படம் 1995-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. புகைப்படக் கலைஞர் மார்க் செலிகரால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது உலகளவில் வைரலாகிவருகிறது. நடிகை ஜெனிஃபர் அனிஸ்டனுக்கு தற்போது 51 வயது என்பது குறிப்பிடத்தக்கது.